Friday, September 11, 2009

Tamil Proverbs page 3

கொள்ளும் வரைக்கும் கொண்டாட்டம் , கொண்ட பிறகு திண்டாட்டம் .
அறுப்புக்காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி  
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
தூர்ந்த கிணற்றைத் தூர்வார்காதே
தலையை தடவி மூளையை உரிவான்
இரும்பு அடிக்கிற இடத்தில நாய்க்கு என்ன வேலை ?
கன்னி இருக்க காளை மணம் ஏறலாமா ?
ஆசை அறுபது நாள் , மோகம் முப்பது நாள் 
இரண்டு பொண்சாதிக்காரனுக்குக் கொண்டை என்னத்திற்கு ?
சதை உள்ள இடத்தில கத்தி நாடும்
பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது 
எரிகிற விட்டிலே பிடுங்கிறது லாபம்
காடுப்பூனைகுச் சிவராத்ரி விரதமா ?
உழக்கு மிளகு கொடுப்பானேன் , ஒளிந்திருந்து மிளகு சாரு குடிப்பானேன் ?
சாதுரியப்பூனை மீன் இருக்க, புளியங்காயத் திங்கிறதாம்.
கடுகு களவும் களவுதான் , கற்புரம் களவும் களவு தான்.
இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா?
கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
பாம்பாடிக்குப் பாம்பிலே சாவு , கள்ளனுக்கு களவிலே சாவு .
வெறும் வாய் மெல்லுகிற அம்மையாருக்கு அவல் அகப்பட்டது போல .

கஞ்சி கண்ட இடம் கைலாசம் , சோறு கண்ட இடம் சொர்க்கம் .

சூடு கண்ட பூனை அடுப்பங்கரையில் சேராது .

குமரிக்கு ஒரு பிள்ளை , கோடிக்கு ஒரு வெள்ளை .

பெண்ணின் கோணல் , பொன்னிலே நிமிரும்

தேரோட போச்சு திருநாளு , தாயோட போச்சு பிறந்த அகம்

சீலை இல்லை என்று சித்தி வீட்டுக்கு போனாளாம் , அவள் இச்சம் பாயை கட்டிகொண்டு எதிரே வந்தாளாம் .

பள்ளத்திலே இருந்தா பொண்டாட்டி , மேட்டிலே இருந்தா அக்கா !

கட்டி வைத்த பணத்தைத் தட்டிப் பறித்தார்போல.
 
ஆற்றிலே போகுது தண்ணீரை , அப்பா குடி , ஆத்தாள் குடி.
 
மதில் மேல் பூனை போல .
 
பிள்ளை பெறப் பெறப் ஆசை , பணம் சேரச் சேர ஆசை .
 
தன் வினை தன்னைச் சுடும் , ஓட்டப்பம் வீட்டை  சுடும் .
 
அடி நாக்கிலே நஞ்சும் , நுனி நாக்கிலே அமிர்தமா ?
 
ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறதாம்
 
கண்டால் காமாச்சி நாயகர் , காணவிட்டால் காமாட்டி நாயகர்.
 
ஒட்டைக்கூதன் பாட்டைக் கேட்டு இரட்டை தாழ்பாள்...

தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் .

பழம் பழுத்தால் , கொம்பிலே தங்காது.

உலகத்துக்கு ஞானம் பேய் , ஞானத்திற்கு உலகம் பேய் .

வண்ணானுக்கும் நிர்வாணிக்கும் உறவு என்ன ?

பொங்கின பால் பொய்ப்பால்

அம்மணத்தேசத்தில் கோமணம் கட்டினவன் பைத்தியக்காரன் .

இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா ?

ஊர் எல்லாம் வாழ்கிறது என்று வீடு எல்லாம் அழுது புரண்டாலும் வருமா ?
 
பால் சட்டிக்கு பூனை காவல் வைக்கிறதுபோல்.                 

Monday, February 09, 2009

Tamil Proverbs page 2

ஏரி வெட்டியும் கெட்டது வெட்டாமலும் கெட்டது
means: the Object, Goal is wasted by doing it or not doing it also.

ரெண்டு மலை ஒண்ணு சேர்ந்தாலும்.....
ரெண்டு முலை எப்போதும் ஒண்ணு சேரவே சேராது....
means : two women in a same house cant live peacefully. esp. in marriages 2 wives.

பணம் பெருத்தா ....பறச்சேரியில் போடு....
means : if u r rich, its not wonder that u spend money on women at Brothel.

வெள்ளிக்குப் போடுறதும், வேசிக்குப் போடுறதும் ஒண்ணு ....
means : the money u spend on Silver wares is as useless as u spend on the Prostitutes.
coz both are useless and will be dull after some time, not durable.

Saturday, June 18, 2005

Tamil Proverbs page 1

அடுத்த வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன் பிள்ளை தானே வளரும்

வாய் கருப்பட்டி கை கருணைக்கிழங்கு

ஓட்டுல புட்டவிச்சு உமிக்காந்தல்ல களி கிண்டிருவா

படுத்துவாரெல்லாம் படுத்த, இந்த கடுத்த வாயுமில்லா கடிக்கு

பேசுர பேச்சில அஞ்சு மாசப் பிள்ளையும் வழுகி விழுந்திரும்

பாவி போன இடம் பாதாளம்

மருந்துக்கு மோளச் சொன்னா நிறைய [மண்ணுல] மோளுவா

குடுக்காத இடையன் சினை ஆட்டை காட்டுன மாதிரி

பாம்பு கடிச்சி படக்குன்னு போக

அடியந்திர வீட்டுல பிள்ள வளப்பா

ஒரு கண்ணுல வெண்ணை மறு கண்ணுல சுண்ணாம்பு

தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிரும் வேற

மாமியார் உடைச்சா மண் குடம், மருமக உடைச்சா பொன் குடம்

கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு

தனக்கு தனக்குன்னா, தாச்சீல பதக்கு கொள்ளும்

காவிரி ஆறு கஞ்சியாப் போனாலும் நாய்க்கு நக்கித்தான் குடிக்கணும்

ஆத்துல த்ண்ணி போனா, நீ குடி, நான் குடி.

எச்சிக் கையாலெ காக்கா ஓட்ட மாட்டா

அறுத்த விரலுக்கு சுண்ணாம்பு வைக்க மாட்டா

அவதாம் பிள்ளைய நொந்து பெத்தா, நான் தவிட்டுக்கு வாங்கினேனா?

கூரையில சோத்த போட்டா ஆயிரம் காக்கா

அடுத்த வீட்டிலே அடுப்பெரியது காணப்பிடாது

இலை போடுகிற நேரத்தில கழுகுக்கு மூக்கு விசர்த்திரும்

வேணும்னா சக்க வேரிலேயும் காய்க்கும்

பம்மாத்துக் குளம் அழிஞ்சு போச்சு பயக்கள கூப்பிடு மீன் பிடிக்க

வெள்ளாடு போன இடமும் வெள்ளாடு போன இடமும் வெட்டை

வந்தேரி வரத்தேரி

உடுத்திக் கெட்டான் பார்ப்பான், உண்டு கெட்டான் வெள்ளாளன்